சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பால் அவதி

சங்ககிரி: மேல்புதுார் கிராம பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்கக்-கோரி, குமாரபாளையம் - இடைப்பாடி சாலையில் மக்கள் மறி-யலில் ஈடுபட்டனர்.

சங்ககிரி, தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி மேல்பு-துாரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, வடக்கு காடு பஸ் ஸ்டாப்பில் இருந்து, 2 கி.மீ.,ல் உள்ள, மேல்புதுாருக்கு, 15 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை சீர-ழிந்துள்ளது. இதனால் சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள், ஒன்-றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. 2 ஆண்டுக்கு முன், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது, ஒரு மாதத்தில் சீரமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தும், இதுவரை நடவ-டிக்கை இல்லை.

நேற்று காலை, 8:30 மணிக்கு மேல்புதுார் மக்கள், மாணவ, மாணவியருடன், குமாரபாளையம் - இடைப்பாடி சாலையில் வடக்கு காட்டில், மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்து, தேவூர் போலீசார் சென்று பேச்சு நடத்தினர். உடன்பாடு எட்டப்
படாததால், பள்ளி வாகனங்கள், பணிக்கு செல்லக்கூடிய தனியார் நிறுவன வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் நின்று, 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்து, அங்கு வந்த சங்ககிரி பி.டி.ஓ., முத்துசாமி, 'ஒரு மாதத்தில் சாலை அமைத்து தரப்படும்' என உறுதி அளித்தார். அதை ஏற்காத மக்கள், 'கடிதமாக எழுதி தர வேண்டும்' என வலி-யுறுத்தினர். இதனால் சாலையை பார்வையிட்டு, உடனே அமைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார். மக்கள் ஏற்று, மறியலை கைவிட்டனர். பின் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

Advertisement