அரசு மீது தவறான பிம்பத்தை கட்டமைக்கின்றனர்

1

வெனிசுலா அதிபரையும், அவரது மனைவியையும் அமெரிக்கா கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இதை, இந்தியா ஏன் கண்டிக்கவில்லை? பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு, வெல்லத்தை உள்ளூர் விவசாயி களிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.

எங்குமே இல்லாத கடனை, தமிழகம் பெற்று விட்டதை போலவும், பெரிய அளவில் போதை பொருள் புழக்கம் இருப்பதை போலவும் பா.ஜ.,வினர் பேசுகின்றனர்; தி.மு.க., அரசு மீது தவறான பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.

தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய பா.ஜ., அரசு தரவில்லை. எனவே, திட்டங்களை கிடப்பில் போடக்கூடாது என்ற காரணத்தால் தான், தமிழக அரசு கடன் வாங்குகிறது. நாட்டில் ஊழல்வாதிகள் எல்லாம் பா.ஜ.,வில் சேர்ந்தால், துாய்மையாகி விடுவர். அந்த வகையில், இந்திய வாஷிங் மெஷின் பா.ஜ., அதுபோல, தமிழகத்தின் நவீன வாஷிங் மெஷின் த.வெ.க.,வாகும்.

- வீரபாண்டியன், மாநில செயலர், இ.கம்யூ.,

Advertisement