சதித்திட்டம் முறியடிப்பு; ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடித்து அழிப்பு

3

ரஜோரி: ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர்.


ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி தாலுகாவுக்குட்பட்ட கல்லார் வனப்பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெடிமருந்துகள் நிரப்பிய சக்திவாய்ந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.


இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வெடிபொருளை பத்திரமாக செயலிழக்கச் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர்.என்றும், வெற்றிகரமாக சதிச் செயல் முறியடிக்கப்பட்டு விட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement