பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகம் முழுதும், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை இன்று (ஜனவரி 08) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து, இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளன. இதற்காக கடைகளுக்கு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அனுப்பப்பட்டு உள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க, ஒரே சமயத்தில் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக, எந்த தேதியில், எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கனை' கார்டுதாரர்களின் வீடுகளில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், ரேஷன் ஊழியர்கள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 08) சென்னை, ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கும் துவங்கி உள்ளது.
தலைவரின் - மலைக்கள்ளன் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது
பரிசு எல்லோருக்கும் உண்டு. தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் ஸ்டாலினுக்கும் உண்டு, இவர் வீட்டிற்கு பங்கீட்டு அட்டை இருக்கும். இவர்பரிசு வாங்குவாரா தெரியாது. இவர் வாங்கவில்லை என்றால் காரணம் இருக்கும். இவரை பின்பற்றி மக்களும் பரிசு வாங்காமல் தமிழக தலைமை அமைச்சர் வழி செல்லவேண்டும்.
கூட்டணி என்று அமைத்து - அவர்கள் வாயை பூட்டி விட்டாரே - அதுதான் சாமர்த்தியம்
போட்டோ ஷூட்லயே 5 வருஷம் ஓட்டிட்டாருப்பா .
இந்த வருடமாவது அதிக மெல்டிங் பாயிண்ட் உள்ள வேயிலில் உருகாத வெல்லம் கொடுப்பார்களா?. உணவு மந்திரி மனது வைப்பாராக
பொங்கலுக்கு இலவசம் தீபாவளிக்கு இலவசம் என்பதை மாற்றி மக்களுக்கு சுய வருமானம் ஏற்படும்படி செய்து. சொந்த காசில் எதையும் வாங்கி அவர்கள் மனது பொங்கும்படி செய்தால் அது தான் அவர்கள் உண்மையாக பொங்கல் கொண்டாடும் நாளாக இருக்கும்.
வாசகர்கள் எல்லாம் வேந்து நொந்து போய் கிடக்காக. அவிங்களை சிரிக்க வைக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.ஆனால் சிரிப்பு வரலை. மேலும் சிரிப்பு வரவழைக்க சீரியஸாக ஏதாவது எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
படத்தில ஒருத்தர் வணக்கம் போடுவதை பார்த்தஆல் அவர் தான் தான் தொகுதி வேட்பாளராக இருப்பார் என்று தெரிகிறது. தேர்தல் நேரங்களில் தானே ஒட்டுன கைகள் பிரிய முடியாதபடி இருக்கும். தேர்தல் முடிஞ்சு ஆட்சிக்கு வந்திட்டால் அப்புறம். எல்லாம் இலவசம் தானே -[பொன்முடி] என்று நக்கலடிக்க வேண்டியாது தான். சோறு தான் துண்ணுறீகளா? -சேகர். .ஏதோ ஒரு மாண்புமிகு.. யோவ் வாயை மூடு என்று ஒரு பொண்ணை பார்த்து. ...மாண்பாவது மண்ணாங்கட்டியாவது ,,..தை பிறந்தால் மக்களுக்கு புது வழி பிறக்கலாம் ...
பொங்கல் பரிசு போட்டோ ஷூட் தொடங்கைவைத்த விழாவில் மற்ற சமுதாயத்தினருக்கு பரிசு கொடுக்கும் போட்டோ ஷூட்டிங் எதற்கு? பிலிம் காட்டவா? மற்ற சமுதாயத்தினருக்கு பரிசு கொடுக்கும் போது ஹிந்துக்களை அழைத்து பரிசு கொடுத்தீரா? அப்போது சமத்துவம் ....யில் விழுந்து விட்டதா? இந்துக்களே ஏமாறவேண்டாம், ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்.
பொங்கல் பரிசு விநியோகம் என்கிற போர்வையில், ஊரை ஏமாற்றும் வேலையை முதல்வர் தொடங்கிவைத்தார், அப்படித்தானே?
போட்டோவில் கும்பிடு போடும் அமைச்சரின் பாடி லாங்குவேஜ் இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய 2500 கோடிகளில் ஊழல் கமிஷன் நாற்பது சதவீதம் அதாவது 1000 கோடிகளை திருப்பியும் கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பம் தொடங்கி வார்டு மெம்பெர் வரைக்கும் திருப்பி கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவிப்பது போல இருக்கிறது.மேலும்
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
-
தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு