வீடற்ற அமெரிக்க தம்பதிக்கு உதவிய இந்தியர்: வீடியோ வைரல்
வீடற்ற அமெரிக்க தம்பதிக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்கிய இந்தியர் குறித்த வீடியோவை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் ஒரு வீடற்ற தம்பதிக்கு உதவி செய்யும் இந்தியரான நோவா என்ற நபரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி பல்வேறு தரப்பிடமிருந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
இது குறித்து நோவா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பதாவது:புத்தாண்டு தினத்தன்று இந்தத் தம்பதியைக் கண்டேன், அவர்களிடம் தண்ணீர் கூட இல்லை என்பதைக் கண்டேன். முதலில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தேன். பிறகு உணவு கொண்டு வந்து கொடுத்தேன். உதவ முடிந்ததி் நான் உண்மையிலேயே பாக்கியசாலி என பதவிட்டு இருந்தார்.
மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ள இந்த வீடியோ குறித்து சமூக ஊடகப் பயனர்கள் நோவாவின் பணிவு மற்றும் கருணையைப் பாராட்டினர்.நீங்கள் மிகவும் நல்ல காரியங்களைச் செய்கிறீர்கள், சகோ" மற்றும் "நீங்கள் ஒரு பணிவான மனிதர்" போன்ற கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த வீடியோ மனிதநேயத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியதாகவும், நீங்கள் மிகவும் நல்ல காரியங்களைச் செய்கிறீர்கள் சகோ,நீங்கள் ஒரு பணிவான மனிதர்.வெளிநாடுகளில் இதுபோன்ற கருணைச் செயல்களைக் கண்டதில் பெருமை தெரிவித்த இந்தியப் பயனர்களிடமிருந்து பல பதில்கள் வந்தன. ஒரு கருத்தில், "ஒரு இந்தியனாக, சகோதரரே, உங்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பலர் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
வாழ்க உங்கள் உதவிக்கரம்மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை