தேசியம் பேட்டி

ரூ.34,000 கோடி முதலீடு!


ராணுவ உபகரணங்களுக்காக இந்தியா இனி மற்ற நாடுகளைச் சார்ந்திருக்க தேவையில்லை. உத்தர பிரதேசத்தில் உள்ள ஆறு பாதுகாப்புத் தொழில் வழித்தட மையங்களில் 34,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, ஆயுத உற்பத்தியில் நம் நாடு தற்சார்பு நிலையை எட்டுவதை உறுதி செய்யும். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,

எதிர்க்கட்சியினருக்கு குறி!


அமலாக்கத் துறையால், எதிர்க்கட்சி ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு நடந்த ஈ.டி., சோதனை கவலை அளிக்கிறது. இந்த அமைப்பை, உச்ச நீதிமன்றம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். கபில் சிபல் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,

நிலைப்பாட்டில் மாற்றம்!


நம் நாட்டில் சீன வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மீதான ஐந்து ஆண்டு கட்டுப்பாடுகளை நீக்கும், 'நிடி ஆயோக்'கின் பரிந்துரைகள், அந்நாட்டிடம் மத்திய அரசு சரணாகதி அடைவதை காட்டுகிறது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்

Advertisement