போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை
புதுடில்லி : போலியாக வரும் ஜி.எஸ்.டி., நோட்டீஸ் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வரி செலுத்துவோரை மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி மத்திய வாரியமான சி.பி.ஐ.சி., எச்சரித்துள்ளது.
ஜி.எஸ்.டி., அதிகாரி என்று கூறி தனக்கு வந்த அழைப்பு குறித்து, சமூகவலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு சி.பி.ஐ.சி., விளக்கம் அளித்துள்ளது.
மோசடியாளர்கள் சிலர், ஜி.எஸ்.டி., ஆவணங்கள் போல போலியாக உருவாக்கி, உண்மையான சம்மன் போல அனுப்புவது தெரிய வந்துள்ளது. எனவே, நோட்டீசில் தெரிவிக்கப்படும் டி.ஐ.என்., எண்ணை சி.பி.ஐ.சி., இணையதளத்தில் பதிவிட்டு வரிசெலுத்துவோர் சரிபார்க்கவும், போலி என தெரிந்தால், உடனடியாக புகார் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement