இலங்கையில் பெய்லி பாலம் அமைக்கும் பணியில் இந்திய ராணுவம்

கண்டி: இலங்கை கண்டி பகுதியில் பெய்லி பாலம் அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியதூதரகம் தெரிவித்து உள்ளது.

சமீபத்திய புயலான தித்வா புயல் இலங்கையில் பயங்கர சேதத்தை உண்டு பண்ணியது. இதனையடுத்து இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியாவின் 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் ஒரு பகுதியாக கண்டி பகுதியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் கடந்த மாதம் இலங்கைக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தித்வா புயலுக்கு பிந்தைய சீரமைப்பிற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு விரிவான உதவித் தொகுப்பை வழங்கும் எனவும்,இதில் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சலுகைக் கடனாகவும், 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மானியங்களாகவும் அடங்கும் என கூறி இருந்தார்.

'ஆபரேஷன் சாகர் பந்து' என்னும் திட்டம், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. இதன் கீழ், இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு, கொழும்பில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளை மீட்டெடுக்க உதவியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

Advertisement