10 ஆண்டுகால திமுக பயணத்துக்கு முடிவு; தவெகவில் இணைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தி
சென்னை: திமுகவில் 10 ஆண்டு காலமாக இருந்த, காமராஜரின் வம்சாவளி பேத்தி, நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக, பாஜ உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய பலர் இன்று இணைத்துக் கொண்டனர். தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவை தொடர்ந்து புதிய கட்சி உறுப்பினர்களுடன் நடிகர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இன்று தவெகவில் இணைந்தவர்களில் சிலர் குறிப்பிடத்தக்க அரசியல் பாரம்பரியமும், பின்னணியையும் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களில் அனைவர் கண்ணிலும் பட்டவர் டி.எஸ்.கே. மயூரி கண்ணன். இவர் முன்னாள் முதல்வர் காமராஜரின் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். காமராஜரின் தம்பி அண்ணாமலை நாடாரின் பேத்தி.
தொடக்கத்தில் பாஜ.வில் இருந்த மயூரி, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் 2016ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், காமராஜரின் இளைய சகோதரி மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பை அப்போது திமுக அதிகாரப்பூர்வமாக பெரியதாக வெளியிட்டு இருந்தது.
இந் நிலையில், திமுகவில் இருந்து விலகி, தற்போது தவெகவில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு இருக்கிறார் மயூரி. இணைவுக்கு பின்னர் அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
இன்றைக்கு குடும்ப ஆட்சியை வேரோடு அறுக்கக்கூடிய இளைய தலைவராக மக்கள் அத்தனை பேரும் ஒரு மாற்றத்திற்கான தலைவராக இன்றைக்கு இருக்கக்கூடிய தவெக தலைவரை சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளேன். கோட்டையில் தவெக கொடி பறக்கும் என்பதே லட்சியம். வெற்றி நிச்சயம்.
திமுகவில் 10 ஆண்டுகாலமாக எந்த பொறுப்பும் இல்லாமல் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன். இன்றைக்கு இளைஞர்களின் விடிவெள்ளியாக இருக்கக்கூடிய ஒரு தலைவரை ஆதரிக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். பொறுப்பை எதிர்பார்த்து நான் தவெகவில் சேரவில்லை. நான் ஒரு 3 தேர்தல்களில் வேலை பார்த்துள்ளேன். விஜய் வெற்றிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.
இவ்வாறு மயூரி தமது பேட்டியின் போது கூறினார்.
இதே இணைப்பு விழாவில் தவெகவில் இணைத்துக் கொண்ட மற்றொரு நபர் வி.ஆர். ராஜ்மோகன். இவர் பிரபல எழுத்தாளர், நடிகர் வேல. ராமமூர்த்தியின் மகன் ஆவார். ஓபிஎஸ் ஆதரவாளரான அவர், அதிமுக மீட்புக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார். ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியாக திகழ்ந்த அவர், பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து விலகினார். இன்று தம்மை தவெகவில் இணைத்துக் கொண்டு உள்ளார். இவர்கள் தவிர தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின் தவெகவில் இணைந்தார்.
ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சி இவர்கள் எல்லாம்
கழுதை கெட்டால் குட்டி சுவரு.
ஒவ்வொருத்தரும் லட்சக்கணக்கில் வாக்குகளை விஜய் கட்சிக்கு வாங்கி வந்துடுவாங்க அட போங்கப்பா அண்ணாதுரை சொன்னமாதிரி தன் நிழல் கூட பின் தொடர்ந்து வராத அளவுக்கு செல்வாக்கு உள்ளவங்க இந்த ஆட்கள்
மீன்கள் நிறைய உள்ள குளம் தேடும் பறவை போலும். காமராஜர் பேரை எல்லாம் இழுக்க வேண்டாம்.
10ஆண்டு காலம் திமுகவில் இருந்ததே ஒரு கேவலமான பிழைப்பு. இதில் காமராஜ் பேத்தி என்று பற்றுவது வேறு. பச்சோந்தி வாழ்க்கை.
தற்குறி காட்சியில் இன்னொரு தற்குறி. ஓர் திருட்டு கழகத்திலிருந்து இன்னொரு திருடப் போகும் கழகம்.
என்ன பிரயோஜனம்?
ஏன் மற்ற கட்சியினர் தவெகாவில் இப்படி அவசரகதியில் இணைகின்றனர்? தானா சேரும் கூட்டமா? அல்லது எதையோ எதிர்பார்த்து இணைகின்றனரா?
காமராஜரின் பேத்தி காமராஜர் போலவே நேர்மையுடன், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமா ????
காமராசர் வம்சாவளி பேத்தி பத்து ஆண்டுகாலம் தீமுகாவில் இருந்ததே ஒரு சாபகேடு.மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்