சூர்யாஸ்திரா தயாரிக்க தனியாருடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம்

புதுடில்லி: நீண்ட தூர ராக்கெட் லாஞ்சரான 'சூர்யாஸ்திரா' வை தயாரிக்க தனியாருடன் ரூ.293 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது.

சூர்யாஸ்திரா எனப்படும் இந்த அமைப்பு, இந்தியாவின் முதல் 'மேட் இன் இந்தியா' உலகளாவிய மல்டி-காலிபர் ராக்கெட் லாஞ்சர் ஆகும். இது 300 கி.மீ தூரம் வரையிலான துல்லியமான தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது.

இத்தகைய லாஞ்சர்களை தயாரிப்பதற்காக புனேவைச் சேர்ந்த பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனமான NIBE லிமிடெட், மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து ரூ. 293 கோடி ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது.

300 கி.மீ தாக்குதல் வரம்பு கொண்ட ஒரு உயர் துல்லிய அமைப்பை இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement