அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

தர்மபுரி: தர்மபுரி டவுன் அவ்வையார் மகளிர் மேல்நி-லைப்பள்ளி அருகில் நேற்று, அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை சார்பில், திண்ணை பிர-சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்ப-ழகன் துவக்கி வைத்தார். இதில், தர்மபுரி சட்ட-சபை தொகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட, 4, 5, 6, 7 ஆகிய வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களிடம், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தபட்ட திட்-டங்கள் குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி, திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


இதில், பாப்பிரெட்டிபட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்த சாமி, நகர செயலாளர் பூகடை ரவி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement