குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஐந்து நாட்களாக நீடித்த குளிர் அலை சற்று தணிந்ததால், வெப்பநிலை நேற்று குறைந்தபட்சமாக, 4.3 டிகிரி செல்ஷியஸாக உயர்ந்தது. இதுவே, நேற்று முன் தினம் 2.3 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் கடுங்குளிரும் காற்று மாசும் நிலவுகிறது. டில்லியில் ஐந்து நாட்களாக குளிர் அலை வீசியது. இதனால், வெப்பநிலை வெகுவாக சரிந்தது. கடுங்குளிரால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
காற்று மாசு இந்நிலையில் நேற்று வெப்பநிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சப்தர்ஜங் ஆய்வு மையத்தில் வெப்பநிலை நேற்று, 4.3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட 3.3 டிகிரி செல்ஷியஸ் குறைவு. பாலம் - 4.7, லோதி சாலை - 4.7, ரிட்ஜ் - 6, அய நகர் - 4.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இதுவே, நேற்று முன் தினம் சப்தர்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, 2023-ம் ஆண்டுக்குப் பின், ஜனவரி மாதத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.
சராசரி காற்றுத் தரக் குறியீடு நேற்று, 348ஆக பதிவாகி இருந்தது. கடுங்குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்தது. சாலைகளில் சென்ற வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து சென்றன.
உறைபனி அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாபிலும் கடுங்குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் உறைபனி சூழ்ந்துள்ளது. ஹரியானாவின் பிவானி நகரில் வெப்பநிலை நேற்று, 1.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி, மாநிலத்திலேயே மிகவும் குளிரான இடமாக அறிவிக்கப்பட்டது.
நர்னால் - 2, ஹிசார் - 2.2, அம்பாலா - 5.8, கர்னால் - 6.2, குருகிராம் - 4.9, ரோஹ்தக் - 5.2, பரிதாபாத் - 4.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பஞ்சாம் மாநிலம் எஸ்.பி.எஸ். நகர் மாவட்டத்தின் பல்லோவால் சவுங்கிரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.9 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. குர்தாஸ்பூர் - 2.7, பதிண்டா - 3, அமிர்தசரஸ் - 3.2, லூதியானா - 5.2, பாட்டியாலா - 6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் மூடுபனி உறைந்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
@block_B@
அடர்பனி மற்றும் கடுங்குளிர் காரணமாக, உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை இன்று வரை குளிர்கால விடுமுறையை நீட்டித்து, மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் உத்தரவிட்டுள்ளார். சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. யு.பி., மற்றும் மாநில அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இன்று வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்று விடுமுறை நாள். எனவே, 19ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. உத்தரவை மீறி, வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். குளிர்கால விடுமுறை ஏற்கனவே, 15ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்தது.block_B
@block_B@
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப பல்கலை பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் ஜலந்தர் பயணம் ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப் கவர்னரும், சண்டிகர் நிர்வாக அதிகாரியுமான குலாப் சந்த் கட்டாரியா, மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கினார். அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலையில் நேற்று முன் தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். பஞ்சாப் அரசு சார்பில் ஜனாதிபதி முர்முவுக்கு, இரவு விருந்து அளிக்கப்பட்டது. கவர்னர் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.block_B
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்