இலவச கண் சிகிச்சை முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் மற்றும் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் சார்பில் ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுநர் செந்தில்குமார், துணை ஆளுநர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமிற்கு நிதியுதவி வழங்கிய ரோட்டரி நிர்வாகிகள் சிவகுமார், சசிகுமார், செல்வகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் உப்பாளி முகாமில் பங்கேற்ற 119 பேருக்குப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.
இதில், 31 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனையின் இலவச அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் பணிகளை ரோட்டரி முன்னாள் தலைவர் பெருமாள், உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், ஸ்ரீனிவாசன், சேகர் செய்திருந்தனர்.
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்