தார்ச்சாலை வசதி கேட்டு 3வது நாளாக போராட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், கொல்லிமலை அடிவா-ரத்தில் கோம்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்-திற்கு, பொன்னேரி கை காட்டியில் இருந்து, விவ-சாய நிலம் வழியாக செல்லும் மண் சாலை உள்-ளது. இந்த சாலையை கிராம மக்கள் பல ஆண்-டாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து, அதிகா-ரிகள், தார்ச்சாலை அமைக்க அளவீடு செய்தனர். அப்போது, போதிய இடம் இல்லாததாலும், இந்த சாலை ஓடை புறம்போக்கில் இருந்ததால், சாலை அமைக்கும் பணியை கைவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள், 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, தாசில்தார் வெங்கடேசன் கூறியதா-வது: போராட்டம் நடத்துபவர்கள், 20 அடி ஓடை புறம்போக்கில், 15 அடிக்கு சாலை வசதி கேட்-கின்றனர். நீதிமன்ற

உத்தரவுப்படி, அது சாத்தியப்-படாது. எனவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தை துாண்டு-பவர்கள் மீது எருமப்பட்டி போலீசில் புகார்

கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement