புதிய தார்ச்சாலையில் வெள்ளைக்கோடு தேவை

நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலையில் துாசூர் உள்ளது. அங்குள்ள ஏரி பகுதியில் இருந்து அலங்காநத்தம் பிரிவு வரை, புதிதாக போடப்பட்ட தார்ச்சா-லையின், இரண்டு
பக்கங்களிலும், பிரிவு சாலை-களிலும், வேகத்தடைகளிலும் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், துாசூரில் இருந்து நாமக்கல் சாலையில் உள்ள சாலப்பாளையம்-பெருமாப்-பட்டி பிரிவு சாலை வரை அமைக்கப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையில் வெள்ளைக்கோடுகள் போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், இரவில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சாலையில் உடனடியாக வெள்ளை கோடுகள் வரைய நெடுஞ்சலைத்-துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement