நில மோசடியில் ஈடுபட்டவர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையம், ராகவேந்திரா தெருவை சேர்ந்-தவர் சிவக்குமார், 60; கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். செங்காடு பகுதியில் இவ-ருக்கு சொந்தமான, 10,222
சதுரடி நிலத்தை, வேமன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த சக்-திவேல், 56, என்பவருக்கு விலைக்கு கொடுப்ப-தாக தெரிவித்துள்ளார். இதனால், கடந்த ஏப்., 27ல், சிவக்குமாருக்கு சொந்தமான அலுவல-கத்தில், சக்திவேல், 10 லட்சம் ரூபாய் கொடுத்-துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சிவக்-குமார், ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பம் போட்டு கொடுத்துள்ளார்.


பின், நிலத்தை கிரயம் செய்து தருமாறு, சிவக்கு-மாரிடம், சக்திவேல் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். விசாரித்தபோது, அந்த நிலம் சிவக்குமார் மனைவி மோகன கமலா பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, சிவக்குமாரிடம், சக்-திவேல் கேட்டபோது, தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், சக்-திவேல், குமாரபாளையம் போலீசில் புகார-ளித்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்ப-திவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

Advertisement