தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்

21

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங். தொண்டர்கள் கேட்பது தவறில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. இந்த பாரம்பரிய மாநிலத்தில் எங்களுக்கு என்று கணிசமான ஓட்டு வங்கி இருக்கிறது. தமிழக நலன்களில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சி காங்கிரஸ். அதை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறது. ஒன்றாக இணைந்தும் (திமுகவுடன்) செயல்படுகிறோம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. அதில் எந்த தவறும் இல்லை. மேலும், தமிழக மக்களுக்கு உதவக்கூடிய வகையில் (ஆட்சி அதிகாரம், பங்கு ஆகியவற்றை குறிப்பிடுகிறார்) கேட்பதில் எந்த தவறும் இல்லை.

எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் தமிழகத்தில் பாஜவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் காலூன்ற முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அரசு நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது என்பதை மக்கள் விரும்பி உள்ளனர்.

பட்ஜெட் ஒதுக்கீட்டில் மத்திய அரசு நியாயமற்ற முறையில் நடக்கிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தி, அவர்களின் பங்கை 40 சதவீதமாக குறைத்துள்ளனர்.

இவ்வாறு சச்சின் பைலட் பேட்டி அளித்தார்.

Advertisement