மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

3

ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தில் 12க்கும் அதிகமான ரயில்களை பிரதமர் மோடி அன்பு பரிசாக அளிக்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எப்படியும் இம்முறை அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வென்று ஆட்சியை பிடிக்க பாஜ முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பாஜவின் செயல்திட்டங்களை தகர்த்தெறிந்து, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜியும் செயல்பட்டு வருவதால், மேற்கு வங்க மாநில அரசால் பலரால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ஜல்பைகுரியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி;

மேற்கு வங்கத்திற்கு ஒரு டஜன் புதிய ரயில்களை பிரதமர் மோடி பரிசாக வழங்குகிறார். வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்களின் முதல் தேவை நாளை(ஜன.17) கவுகாத்தியில் இருந்து கோல்கட்டாவுக்கு தொடங்க உள்ளது. இந்த சேவையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேற்கு வங்கத்தில் 101 ரயில்நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement