வாரியத்தில் உறுப்பினராக இணைந்து பயன்பெற அழைப்பு


நாமக்கல்: ''வரும், மார்ச், 31க்குள் வாரியத்தில் உறுப்பின-ராக இணைந்து பயன்பெறவேண்டும்,'' என, வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரி-வித்தார்.


தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் மாவட்ட மற்றும் தாலுகா சங்கத்தின், 5ம் ஆண்டு தொடக்கவிழா, நாமக்கல்லில் நடந்-தது. மாநில துணைத்தலைவர் எட்டிக்கன் தலைமை வகித்தார். தாலுகா சங்க செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். தலைவர் குமார், மாவட்ட தலைவர் பாபு, செயலாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேர-மைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்-குமார் வெள்ளையன், நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் பங்கேற்-றனர்.


தொடர்ந்து, பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், சங்க கொடியை ஏற்றி வைத்து, ''வணிகர் நல வாரியத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம், ஏராளமான பயன்கள் பெறமுடியும். தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணமில்லா சேர்க்கையை பயன்படுத்தி, வரும், மார்ச், 31க்குள் வணிகர்கள் அனைவரும், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து பயன்பெற வேண்டும்,'' என்றார்.


பின், மரணமடைந்த தாலுகா சங்க உறுப்பினர்-களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்-கப்பட்டது. பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement