குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!

1


புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, காலிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையின் பேரில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டின் 77வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டில்லியில் உள்ள கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம்.

இதற்கென பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, காலிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இந்த கும்பல்கள் பஞ்சாப், ஹரியானா, டில்லி, உ.பி. மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் டில்லியிலும், அருகேயுள்ள பிற மாநிலங்களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பஸ்ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை கண்காணிக்கும்படியும், தேவையான இடங்களில் கூடுதல் போலீஸ், துணை ராணுவப்படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்படியும், மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement