ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம் மாநாட்டில் தீர்மானம்
மதுரை: மதுரையில் நடந்த புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும் எனபன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடந்தது. இம்மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். ஷ்யாம், குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 2026 ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும்.
2. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது.
3. ஜாதி வேறுபாடுகள், தீண்டாமை ஒழிப்பை மத்திய மாநில அரசுகள் செயல் திட்டங்களை வகுக்க வலியுறுத்தல்
4. தமிழகத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அனைத்து குவாரிகளையும் நிறுத்த வேண்டும்
5. 2026 மார்ச்சுக்குள் பூரண மதுவிலக்கை அமல் படுத்த தவறினால் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்படும்.
6. தமிழக கோயில்களில் பரம்பரை பூசாரிகளை நீக்கி தகுதி அடிப்படையில் பூசாரிகள், அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும்.
7. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்றாதது கண்டிக்கத்தக்கது. மலையில் எவ்வித ஆக்கிரமிப்புகளுக்கு அரசு இடம் தர கூடாது. திருப்பரங்குன்றம் நிர்வாக பொறுப்பில் இருந்து அறநிலையத்துறை விலகி கொள்ள வேண்டும்.
8. காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்.
9. 2026 சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தமிழக நிர்வாகம் இருக்க வேண்டும்.
10. உலகிலுள்ள ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் விகிதாச்சார தேர்தல் முறையை இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டும்.
11. அனைத்து கவுரவ படுகொலைகளுக்கு திராவிட கொள்கை வாதிகள் பொறுப்பேற்க வேண்டும்.
12. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மாஞ்சோலையிலேயே தலா 2.5 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும்.
13. திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
14. 2026ல் புதிய தமிழகம் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இதுவே இக்கட்சியின் கொள்கை நிலைப்பாடு.
15. தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, தேவேந்திர குல வேளாளர்கள் என்ற புதிய பட்டியலை உருவாக்கி, மக்கள் தொகைக்கு ஏற்ப 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மேலும்
-
வட மாநில தொழிலாளர் பாதுகாப்பில் கோட்டை விடும் தமிழக போலீசார்
-
மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
-
கூட்டணியை அழைக்காமல் பிரதமர் பொதுக்கூட்ட இடத்தில் பூஜை; பா.ஜ., அதிருப்தி
-
முதல்வரின் 'கேட்டரிங்' பொங்கல்: தமிழக அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
-
தாய்மொழி வழி கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது: தர்மேந்திர பிரதான்
-
மஹா.,வில் இன்று மாநகராட்சி தேர்தல்: மும்பையை கைப்பற்ற போவது யார்?