வெள்ளி வென்றார் அனாஹத்
பர்மிங்ஹாம்: பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் வெள்ளி வென்றார் இந்தியாவின் அனாஹத் சிங்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, ஐரோப்பிய சாம்பியன், பிரான்சின் லாரன் பல்தயானை எதிர்கொண்டார்.
முதல் செட்டை அனாஹத், 9-11 என இழந்தார். அடுத்த செட்டில் சுதாரித்த இவர், 11-7 என கைப்பற்றினார். பின், 3வது செட்டை 3-11 என எளிதாக நழுவவிட்டார். தொடர்ந்து 4 வது செட்டில் போராடிய போதும், 9-11 என கோட்டை விட்டார்.
முடிவில் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பிரிட்டிஷ் ஓபன் தொடரில் 2019 (11 வயது), 2023 (15), 2025 (17) என தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற அனாஹத், இம்முறை வெள்ளி கைப்பற்றியுள்ளார்.
மேலும்
-
திமுக இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்படணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
அமெரிக்க பொருளாதாரம் செழித்து வளர்கிறது; அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-
அபரிமிதமான செழிப்பு, வெற்றி கிடைக்கட்டும்; பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு: வெள்ளி விலையும் புதிய உச்சம்
-
ஈரானில் தொடரும் போராட்டம்: பலி 2,571 ஆக அதிகரிப்பு
-
பொங்கலோ பொங்கல்; தமிழில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாழ்த்து