பொங்கல் பண்டிகைக்காக 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, இரண்டாம் கட்டமாக, சென்னை - துாத்துக்குடி உட்பட, ஐந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
★ திருநெல்வேலியில் இருந்து வரும் 13, 20ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் மதியம் 2:00 மணிக்கு, தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து 13, 20ம் தேதி, மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்
★ திருநெல்வேலியில் இருந்து, வரும் 14ம் தேதி அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வரும். செங்கல்பட்டில் இருந்து, 14ம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்
★ திருநெல்வேயில் இருந்து வரும், 12, 19ம் தேதிகளில், நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதேநாளில் மதியம் 1:30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து வரும் 12, 19ம் தேதி மாலை 4:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்
★ கோவை மாவட்டம், போத்தனுாரில் இருந்து, இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:50 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, நாளை இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:05 மணிக்கு, போத்தனுார் செல்லும்
★ சென்ட்ரலில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:15 மணிக்கு துாத்துக்குடி செல்லும். துாத்துக்குடியில் இருந்து வரும் 13, 20ம் தேதிகளில், மாலை 5:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:45 மணிக்கு, சென்ட்ரல் வரும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 22 பேர் பலி
-
டில்லியில் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்; பிரதமர் மோடி பங்கேற்பு
-
திமுக இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்படணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
அமெரிக்க பொருளாதாரம் செழித்து வளர்கிறது; அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-
அபரிமிதமான செழிப்பு, வெற்றி கிடைக்கட்டும்; பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு: வெள்ளி விலையும் புதிய உச்சம்