குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே குளத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் கடலுார-் பண்ருட்டி சாலையை ஒட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது.
இந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்திருந்தன. கடந்த, 6 மாதத்துக்கு முன் குளத்தில் இருந்த ஆகாயதாமரை செடிகளை அகற்றி துார் வாரினர்.
இதனால் கடந்த மாதம் பெய்த மழையில் குளம் நிரம்பியது. தொடர்ந்து குளத்தை துாய்மையாக பராமரிப்பதோடு நடைபயிற்சி செல்ல குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது குளத்தை பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
அனைத்து குளங்களையும் வரக்கால்பட்டு குளம் போல் பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்
-
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்தது
-
போதை பொருள் கடத்தலை தடுக்க பஸ், ரயில் நிலையங்களில் தனிப்படை
Advertisement
Advertisement