மின்சாரம் தாக்கி சிறுவன் பலி விருத்தாசலம் அருகே சோகம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின் கம்பத்தில் ஏறிய சிறுவன், மின்சாரம் தாக்கி பலியானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ஆலடி அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 17. இவர் உளுந்துார்பேட்டை அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

இவர் அந்த பகுதியில் உள்ள ஒருவது வீட்டில் மின் பழுது நீக்கம் செய்ய, நேற்று மாலை 5:00 மணியளவில், டிரான்பார்மரை நிறுத்தி விட்டு, மின்கம்பத்தில் ஏணியின் மூலம் ஏறி, சரி செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, அந்த கம்பத்தில் சென்ற உயர் மின் அழுத்த கம்பி, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைமீது மீது உரசியது.

அதில், சிறுவன் மின்கம்பத்தில் இருந்து துாக்கி எரியப்பட்டார். இதில், படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சென்ற ஆலடி போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement