மகள் மாயம் தாய் புகார்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த பணப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகள் திவ்யா,18; நர்சிங் முடித்து ஈரோட்டில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பிரச்னை காரணமாக ஈரோட்டில் இருந்து திருக்கோவிலுார் வந்தார். கடந்த 3ம் தேதி திவ்யா வீட்டில் இருந்தார். தாய் பழனியம்மாள் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியோது மகள் மாயமானார். உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement