அதிபர் மதுரோவை விடுதலை செய்யுங்கள்: வெனிசுலாவில் வீதியில் இறங்கி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கராகஸ்: அதிபர் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு, வெனிசுலா தலைநகர் கராகஸில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படை அதிரடியாக கைது செய்தது. அவரது மகன் மதுரோ குரேரா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த சூழலில், வெனிசுலா தலைநகர் கராகஸில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுரோவின் ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மதுரோவையும், அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரோ மகன் காட்டம்
சமூக வலைதளத்தில் அதிபர் மதுரோவின் மகன் மதுரோ குரேரா வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியதாவது: ஆளும் இயக்கத்திற்குள் துரோகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வரலாறு பொறுப்பானவர்களை அம்பலப்படுத்தும். துரோகிகள் யார் என்பதை வரலாறு சொல்லும். நாம் அதை பார்ப்போம், என்றார்.
இங்கிருக்கும் திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்ப பிரைவேட் கம்பெனி ஆட்சியை போலவே அங்கும் குடும்ப பரம்பரை ஊழல் ஆட்சிதான்.
விலைவாசி மிக அதிகம், விண்ணைத்தொடும் பணவீக்கம்.. ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கை, சாதாரண மக்கள் யாருமே கவலைப் படவில்லை. கொண்டாடுகிறாகள்.
Bengal to Venezuela distance : 16000 KM Pros in Kolkata : 160. Bengal to Bangladesh distance : 0 KM Pros in Kolkata : 0.