வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல்: கியூபாவை சேர்ந்த 32 பேர் பலி

4

ஹவானா: வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில், கியூபாவைச் சேர்ந்த 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தினர். அதிபரின் கோட்டைக்குள் நுழைந்த படைகள் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றனர். நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் வெனிசுலாவைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்து இருந்தனர்.


இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் கியூபாவை சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாடு உறுதி செய்துள்ளது. மதுரோ, வெனிசுலா அதிபராக பதவியேற்றது முதல் அவருக்கு கியூபா பாதுகாப்பு அளித்து வந்தது. ஆனால், எத்தனை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்ற தகவல் இல்லை. அவர்கள் நினைவாக இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisement