குண்டத்து காளியம்மன் கோவிலில் தீமிதி விழா
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் உள்ள குண்-டத்து ஓம் காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, இரண்டு வாரத்திற்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா, நேற்று அதிகா-லையில் துவங்கியது. கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்-குண்டத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமி-தித்தனர். பலரும் கை குழந்தைகளுடன் தீமிதித்தனர். தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement