சமயசங்கிலி பகுதியில் கரும்பு அறுவடை தீவிரம்

பள்ளிப்பாளையம்: சமயசங்கிலி சுற்று வட்டார பகுதியில் கரும்பு அறுவடை செய்-யப்பட்டு, ரேஷன் கடைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி, களியனுார், கரமேடு, தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் உள்-ளிட்ட சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆண்டுதோறும், பொங்கல் பரிசு தொகுப்புகளில் கரும்பு வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம், சமயசங்-கிலி சுற்றுவட்டார பகுதி விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு-களை கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு பொங்கல் தொகுப்புக்கு, கரும்பு கொள்முதல் செய்ய, கடந்த, 2ல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கணக்கெடுப்பு பணியில், அதிகா-ரிகள் ஓரிரு நாட்களாக ஈடுபட்டனர். நேற்று முதல் கரும்பு அறு-வடை பணி தீவிரமாக தொடங்கியது. அறுவடை செய்த கரும்பை, லாரிகளில் ஏற்றி ரேஷன் கடைக்கு கொண்டு சென்-றனர்.

Advertisement