நாய்களுக்கு வலிப்பு நோய் தாக்கம் அவசியம் தடுப்பூசி செலுத்த அறிவுரை
நாமக்கல்: 'குளிர்காலத்தில் நாய்களை, 'கெனைன் டிஸ்டெம்பர்' எனும் வலிப்பு நோய் தாக்க வாய்ப்பு உள்ளதால், அதை தடுக்க தடுப்பூசி செலுத்த வேண்டும்' என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்-லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: குளிர்காலத்தில் நாய்-களை, 'கெனைன் டிஸ்டெம்பர்' எனப்படும் வலிப்பு நோய் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நோய் அனைத்து வயதான நாய்களையும் தாக்கும் வல்லமை கொண்டது. இருப்பினும், 6 வயதிற்கு குறைவாக உள்ள நாய்களை அதிக-மாக தாக்கும் சூழல் உள்ளது. இந்நோய்க்கு சிகிச்சை அளித்-தாலும், பெரும்பாலும் அவை பலனளிப்பதில்லை. நாய்களுக்கு தடுப்பூசி அளிப்பதே நோயை தடுக்கும் முக்கியமான நடவடிக்-கையாகும்.
இந்த நோயை தடுக்க முதல்கட்ட நடவடிக்கையாக, நாய்க்குட்-டிகளை ஒன்றரை மாதத்திற்கு பிவ் தான், தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். அதற்கு முன், 42-ம் நாள் வயதில் பார்வோ வைரஸ், கெனைன் டிஸ்டெம்பர், எலிக்காய்ச்சல், இன்பெக்சியஸ் கெனைன் ஹெபடைடிஸ், கெனைன் பாரா இன்புளுயன்சா நோய்க்கான கூட்டு தடுப்பூசியை செலுத்த வேண்டும். அதன்பின், 21 நாள் அல்லது மூன்று வாரங்கள் இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்