திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் (தர்காவிலிருந்து 15 மீ., தொலைவில்) கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார். இதுபோல் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனு செய்தனர். இவற்றை டிச.1ல் அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில், கோயில் நிர்வாகம் சார்பில் மேலமுறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.
இதனிடையே, 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. விலங்கு இறைச்சியை எடுத்துச் செல்லக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்லக்கூடாது. இந்த உத்தரவை மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தர்கா நிர்வாகம் முறையிட்டது. இதை இன்று விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம்,இந்த விவகாரம் குறித்து தீபத்தூண் வழக்கில் விவாதிக்கப்படும் எனவும், தர்கா நிர்வாகம் மனு நாளை விசாரிக்கப்படும் என்றனர்.
அமைதியான தமிழ்நாட்டை மதக்கலவரத்தின் மூலம் கலவரபூமியாக மாற்றத்துடிக்கும் சங்கிகளை வன்மையாக கண்டிப்போம், எதிர்ப்போம்
துரத்தி அடிப்போம்
தீர்ப்பு.... மறுபடியும் வழக்கு... மறுபடியும் தீர்ப்பு... அட போங்கய்யா .... எல்லாம் மாயம்... எங்கள் முருகன் தீர்ப்பு...ஒன்றே தீர்ப்பு...
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு. ஒன்றும் நடக்காது .ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு சாதகமான தீர்ப்பு என்றால் நாத்திக பெரியாரிய திராவிட ஹிந்து விரோத சனாதன தர்ம விரோத திமுக அரசால் அது முடக்கப்படும் . தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் விமர்ச்சிக்கப்படுவார்கள் .தீபத்தூண் கலங்கரை விளக்க தூண் என ஹிந்து அறநிலைய துறை சங்க இலக்கியங்கள் மூலம் நிரூபிக்க முயலும். தீபத்தூண் அல்ல அது ஒரு உடைந்து போன பாண்டி நாட்டார் தெய்வ நடுகல் என திராவிட தொல் ஆய்வாளர்கள் கதையளக்க வருவார்கள்.திருப்பரங்குன்றம் மலை இனி மத நல்லிணக்க சிக்கந்தர் மலை என சொல்லி சிவப்பு தாலிபான் இடது சாரிகள் கூத்தாடுவார்கள்.ஹிந்து கடவுள் மறுப்பு திக திராவிட கருப்பு தாலிபான்கள் தீபத்தூண் ஒரு பாறை மீதில் மழை நீர் சேகரிப்பு தூண் தான் என எள்ளல்கள் /எகத்தாளங்கள் /ஏளனங்கள் பாடும் . ஆனாலும் ஹிந்துக்கள் எது குறித்தும் கவலை கொள்ளாமல் ,மீண்டும் ஸ்டாலின் அரசை ஆதரிப்பார்கள் .இது தான் நிதர்சனம் .
தீர்ப்பு நீதிபதியிடம் இல்லை.. மக்கள் போடும் ஓட்டில் உள்ளது...மக்களுக்கு புத்தி வராதவரை எந்த தீர்ப்பாலும் திமுகவை அசைக்கமுடியாது
பிஜெபிக்கு ஓட்டுப் போட்டால் புத்தி உள்ளவர்கள் மற்றகட்சிக்கு போட்டால் புத்தி இல்லாதவர்கள் என்ன ஒரு அதிமேதாவிதனம் இவர்கள் எல்லாம் வட மாநிலத்தில் இருக்க வேண்டியவர் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
நாளை வெளியாகும் தீர்ப்பையும் திருட்டு திமுக அரசு ஏற்கமறுத்தால், தமிழக அரசை கடுமையாக எச்சரிக்கவேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு.மேலும்
-
அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
-
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் பன்னிஹள்ளிபுதுாரில் கபடி போட்டி
-
சாரல் மழையுடன் கடும் பனியால் பொதுமக்கள் அவதி
-
ரூ.8.55 கோடியில் திட்டப்பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
-
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
-
படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு