அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

பாலக்கோடு: பஞ்சப்பள்ளி அருகே, குடிநீர் கேட்டு பொது-மக்கள் காலிகுடங்களுடன், அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, நேற்று சாலை மறியலில் ஈடுபட்-டனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, பஞ்-சப்பள்ளி அருகே, நம்மாண்டஹள்ளி கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு பஞ்., நிர்வாகம் சார்பில், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது. கடந்த, 3 மாதங்களாக முறையாக வழங்கவில்லை. இதனால், அவதியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை, பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுடன் பஞ்சப்பள்ளி - ராயக்கோட்டை சாலையில் வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபி-டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து வந்த பாலக்கோடு டி.எஸ்.பி., ராஜசுந்தர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் வழங்க, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி
நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement