படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பற்ற இளை-ஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்-டத்தில் பயன்பெற வரும் பிப்., 27க்குள் விண்ணப்-பிக்கலாம்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக் டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்தும், எவ்-வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளை-ஞர்களுக்கு மாதந்தோறும், தமிழக அரசால் உத-வித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10-ம் வகுப்பு தோல்விக்கு, 200 ரூபாய், வெற்றிக்கு, 300, மாற்றுத்திறனாளிகளுக்கு 600-, பிளஸ் 2 தேர்ச்சிக்கு 400, மாற்றுத்திறனாளிகளுக்கு, 750-, பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய், மாற்றுத்திறனாளி-களுக்கு, 1,000- ரூபாய் உதவித்தொகை வழங்கப்-படுகிறது.
உதவித்தொகை விண்ணப்பத்தை, www.tnvelaivaaippu.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்-ணப்ப படிவத்தை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். உரிய சான்றுகளுடன், தங்களது விண்ணப்பங்களை வரும், பிப்., 27-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி-காட்டும் மைய அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்-துள்ளார்.
மேலும்
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
-
29 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வுதான் டி.எஸ்.பி., கனவில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
-
பாலமேடு முதல் சூரியூர் வரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு
-
தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்