தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் பன்னிஹள்ளிபுதுாரில் கபடி போட்டி

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், பன்னிஹள்ளி புதுாரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.


இதில், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிட்டு கொண்டாடினர். தொடர்ந்து, நடந்த கபடி போட்டியை கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசினார்.


இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரி-சுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ர-ஹள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்ரமணி, காவேரிப்பட்டணம் நகர செயலாளர் சாஜித் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement