அதிபர் மதுரோவின் கைதுக்கு பிறகு, வெனிசுலாவில் யார் கையில் ஆட்சி?

5

நமது சிறப்பு நிருபர்

வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்த பிறகு ஆட்சி பொறுப்பை தன்வசப்படுத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது வெனிசுலாவில் யார் ஆட்சியை நடத்துகிறார்கள்? என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.



போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா மீது அமெரிக்கா படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த, அமெரிக்க படையினர் புரூக்ளின் சிறையில் அடைத்தனர்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில் இடைக்கால அதிபர் நியமனம் செய்யப்பட்டார். வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. தற்போது வெனிசுலாவில் யார் ஆட்சியை நடத்துகிறார்கள்? என்ற கேள்வி கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஜகா வாங்கிய அமெரிக்கா



தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: வெனிசுலாவை அமெரிக்கா நேரடியாக ஆட்சி செய்யாது. மாறாக எண்ணெய் முடக்கம் மூலம் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்தும். நேரடியாக ஆட்சி செய்ய மாட்டோம். ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்போம். இந்த அழுத்தம் மூலம் அந்நாட்டின் அரசியல் கொள்கைகள் அமெரிக்காவுக்கு சாதகமான முறையில் மாற்றி அமைக்கப்படும், என்றார்.



இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் இப்போது தான் பதவியில் உள்ளவர்களை கையாள்கிறோம். யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். நான் உங்களுக்கு ஒரு பதிலை கொடுப்பேன். அது சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். நாங்கள் சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவோம், என்றார்.

மிரட்டல்



அதேநேரத்தில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் மதுரோ பார்த்து வந்த முக்கிய பொறுப்பை கவனித்து வருகிறார். '' நாங்கள் சொல்வதை நிறைவேற்றாவிட்டால் மதுரோவை விட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று டெல்லி ரோட்ரிக்ஸை அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

Advertisement