பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்; பிரிட்டன் எம்பி ஆதரவு

ஜெய்ப்பூர்: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் எம்பி பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.


ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஹை-டீ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது; ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று கடந்த 2019ல் பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, நிறைவேற்றிய போது நான் வலியுறுத்தவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1992ம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட போதே, நான் கோரிக்கை விடுத்தேன்.


ஜம்மு காஷ்மீரில் நிலவும் பயங்கரவாதத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் சில பகுதிகள் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதையும் நான் கண்டித்துள்ளேன். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், எனக் கூறினார்.


கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் பிரிட்டன் எம்பி பாப் பிளாக்மேன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாப் பிளாக்மேன், பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் சொல்லி உரையைத் தொடங்கினார்.

Advertisement