அபரிமிதமான செழிப்பு, வெற்றி கிடைக்கட்டும்; பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
நமது நிருபர்
உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் கொள்கிறோம்; இந்த தைத்திருநாள் அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! தங்களுக்கும், தங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது.
ஒற்றுமை உணர்வு
குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பழமையான மொழி
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
செழிப்பு, வெற்றி
தமிழகத்திலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்னாரு
பாஞ்சாலி சபதம்,ஹரிச்சந்திரா நாடகங்கள் போல் இதுவும் ஒரேமாதிரி பார்த்து அலுத்து விட்டது. வேறு ஏதாவது வித்தியாசமாக செய்யலாம்!
அதெல்லாம் அலுத்து விட்டதால் பராசக்தி படத்தை போய் பார்கலாமே வேணு!
பாஞ்சாலி சபதம் என்று சொன்னாலே பெண்கள் ஓட்டம் எடுப்பதை பார்க்க முடிகிறது. அந்த அளவு புகழ் நிறைந்த அரசியல் வரலாறு.
அனைத்து மக்களுக்கும், குறிப்பாக அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு ஒன்றியத்துக்கு ஈட்டுக் கொடுத்த வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய வரிப்பண பகிர்வை ஒழுங்கா கொடுத்து விட்டு வாழ்த்தோ, வாழைக்காயோ பண்ணலாம் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
4000 கோடி ஆட்டைய போட்டுட்டு கணக்கு வரலை...மறுபடியும் தரமுடியாது அறிவாலய சொம்பு
மூவாயிரம் கொடுத்து கம்பு சுத்ர நடிப்பு எல்லாம் தமிழக மக்கள் நம்பவில்லை
உன் திராவிட பிட்ட இனி போடாத
தமிழர்களுக்கு வாழ்த்து சொல்றதுன்னா கிட்னி திருட்டு கழகத்தின் அனுமதி வேணும்.. இவருக்கு இது தெரியாதா இது பெரியார் மண் .....
மூளை அற்ற கூட்டத்தினர் மத அரசியல் செய்வதை தமிழர் ஏற்க மாட்டர்.
தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்ற சொன்னவரை கும்பலை தமிழர்கள் விரட்டி அடிப்பார்கள்மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்