தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு: வெள்ளி விலையும் புதிய உச்சம்
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 12) ஆபரண தங்கம் கிராம் 13,120 ரூபாய்க்கும், சவரன் 1,04,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 287 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (ஜனவரி 13) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 13,170 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,05,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 292 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.92 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளிக்கு மவுசு
வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 307 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
தங்கபாண்டி - ,
14 ஜன,2026 - 12:54 Report Abuse
தங்கத்திற்கு போட்டி வெள்ளியா 0
0
Reply
மேலும்
-
தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
Advertisement
Advertisement