சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிறுவன் காயம்

பிஜாப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்கலுார் பகுதியில் கேந்திர கோர்சோலி வனப்பகுதி நக்சல் நடமாட்டம் உள்ள இடம். இப்பகுதிக்கு நேற்று காலை கோர்சோலி கிராமத்தை சேர்ந்த ராம் போதன், 15, என்ற சிறுவன் சென்றான்.

அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐ.இ.டி., எனப்படும், சக்தி வாய்ந்த வெடிகுண்டை அவன் மிதித்துள்ளான். அது திடீரென வெ டித்ததில், ராம் போதனின் கால்கள் சிதைந்தன.

இதுபற்றி அறிந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், சிறுவனை மீட்டு அவர்களது முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொ டர்ந்து வெடி குண்டுகள் எதுவும் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர்.



இதுகுறித்து சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேடுதல் வேட்டை யில் ஈடுபடும் பாதுகாப்பு படையினரை கு றிவைத்து, ஐ.இ.டி., குண்டுகள் மண்ணில் புதைத்து வைக்கப்படுகின்றன.

பிஜாப்பூரை உள்ளடக்கிய பஸ்தார் பிராந்தியத்தில் நக்சல்கள் புதைத்து வைக்கும் ஐ.இ.டி., குண்டுகளில் பொதுமக்கள் இறக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 46 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement