புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து கருத்து சொல்லுங்க வாசகர்களே... ஜன.25 வரை வாய்ப்பு
சென்னை: புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து, கருத்து கூற விரும்புவோர், ஜன. 25ம் தேதி வரை, கருத்து தெரிவிக்கலாம். உலகெங்கும் வாழும் தினமலர் வாசகர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.
தமிழக பள்ளிக்கல்விக்காக, புதிதாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுனர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியது.
இந்த பாடத்திட்டங்கள், இன்று 'https://tnschools.gov.in' இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன. இது குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தங்களின் கருத்துக்களை, அதே இணையதளத்தில் உள்ள படிவத்தின் வாயிலாக, தங்களின் சுய விபரங்களுடன், வரும் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
தினமலர் வேண்டுகோள்
உலகெங்கும் வாழும் தினமலர் வாசகர்கள், இந்த பாடத்திட்டங்களை பார்வையிட வேண்டும். அது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.
தாங்கள் வசிக்கும் நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடத்திட்டம் எப்படி இருக்கிறது, தமிழகத்தில் எத்தகைய பள்ளி பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பது பற்றி தினமலர் வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் மூலம் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த வாசகர்கள் உதவ வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.
உங்கள் கருத்துக்களை இன்று பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
CBSE பாடத்திட்டம் வேணும் ஒன்று முதல் பன்னிரண்டு வரை எடுகேஷன் இம்போர்ட்டண்ட்
திராவிட தலைவர்கள் பற்றிய பாடங்கள் தேவையில்லை. எல்லா மதங்களில் இருந்தும் நீதி நூல்கள், ஆத்திச்சூடி, சங்க இலக்கியங்கள், பாரத நாட்டின் வரலாறு, அந்நிய படையெடுப்பு, சுதந்திர போராட்ட வரலாறு, வீரர்களின் தியாகங்கள் சேர்க்கப்படவேண்டும்
நல்ல கல்வி குடிநீர் தரமான இலவச மருத்துவமனை போதையற்ற மாநிலம் ஊழலற்ற ஆட்சி நேர்மையான அரசு அறிவுமிக்க ஆசிரியர்கள் அறிவும் அனுபவமும் தன்னலமற்ற தேர்வாணைய அதிகாரிகள் இவை அணைத்தும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் திமுக என்ற கட்சி அழிந்தால் மட்டுமே சாத்தியம்
ஏற்கனவே நமது தமிழ்நாட்டு இருமொழி கொள்கை பாடதிட்டம் சிறப்பாக உள்ளது. சமூக சீர்திருத்தம் குறித்து இன்னும் விழிப்புணர்வு கற்பிக்கவேண்டும். சமூக சீர்திருத்தவாதிகள் பற்றி இன்னும் பயிற்றுவிக்கப்படவேண்டும்...
தேர்தலுக்கு பிறகு அரசியல் கலப்பற்ற நிபுணர்கள் குழு மூலமாக ஆராயலாம்.
அண்டை மாநிலங்களில் உள்ள பாடத் திட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அகில இந்திய அளவில் போட்டி போடும் அளவிற்கு மாணவர்கள் தயார் படுத்தப்பட வேண்டும்.
திராவிடத் தலைவர்கள் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும்...
தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களின் வரலாறு முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும்...
பண்புப்பயிற்சி தரவேண்டும்...
சுற்றுப்புற தூய்மைப் பயிற்சி தரவேண்டும்...
எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது. அதற்குப் பிறகு 90 to 95 சதவீதம் பாஸ். இதுக்கு புத்தகம், பாடம், கட்டிடம், சத்துணவு, வாத்தியார் எதுக்கு?
can capitalize billion of us dollars using poor people education money
திருட்டு திராவிட தற்புகழ்ச்சிகள் கண்டிப்பாக இடம் பெற கூடாது. கலீஞர், அண்ணாதுரை, பெரியார் போன்ற சந்தர்ப்பவாதிகள் புகழ்ச்சி இருக்க கூடாது. தற்கால கணிணி பயன்கள், பாரத நாட்டின் பழம் பெருமைகள் கண்டிப்பாக இடம் பெறவேண்டும். தேச பக்தி போற்றப்பட வேண்டும். ஒழுக்க நெறி சார்ந்த வாழ்வியல் கதைகள் இடம் பெறவேண்டும்.
கடைசிகாலத்தில் தேவையில்லாத ஆணி..ஆட்சி மாறியதும் மறுபடியும் மாற்றப்படும் ஆகவே இது தேவையற்ற செலவு..
உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள் இருக்கும் என்று நம்புவோம்