கருத்தரங்கு

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் கட்டடவியல் துறை சார்பாக, தேசிய அளவிலான வளைவழி பயி லரங்கம் நடத்தப்பட்டது. நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார்.

நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். ஹைதராபாத் குறுநானக் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கட்டடவியல் துறை தலைவர் சுபாஷ் பேசினார்.

மெக்கானிக்கல் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஜம்மு ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சிவாஸ் தயாரிப்பு, வடிவமைப்பு என்ற தலைப்பில் பேசினார். துறை தலைவர்கள் ஆறுமுகம், அருண் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement