குடிநீர் குழாய்கள், மீட்டர் பெட்டி சேதம்
திருப்புவனம்: திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்புவனத்தில் இரு ஆண்டுகளாக 16 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், தெருக்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. சோதனை ரீதியாக குடிநீர் விநியோகத்தின் போதே 90 சதவிகித வீடுகளுக்கு தண்ணீர் சேரவே இல்லை.
வீடுகளில் குழாய்கள் இணைப்பில் பிளாஸ்டிக் பெட்டி அமைத்து அதில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் எவ்வளவு பயன்படுத்துகின்றனரோ அதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான வீடுளில் சோதனை ரீதியின் போதே மீட்டர்கள், இணைப்பு பெட்டிகள் சேதமடைந்து விட்டன. இணைப்பு சரிவர பொருத்தப்படாததால் மீட்டருக்கு முன்னதாகவே தண்ணீர் வீணாகி வருகிறது.
சோதனை ரீதியாக தண்ணீர் விநியோகம் செய்யும் போது சேதமடைந்த இடத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். ஆனால் பல மாதங்களாக சோதனை ரீதியாகவே தண்ணீர் திறக்கப்பட்ட வண்ணம் உள்ளது. புதிய குழாய்கள், இணைப்பு, மீட்டர்கள் அடுத்தடுத்து சேதமடைந்ததால் அதன் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. சேதமடைந்த இணைப்புகளை சரி செய்வது யார் பொறுப்பு, யாரிடம் புகார் செய்வது என்ற எந்த வழிகாட்டலும் இல்லை. புதிய குழாய்களே சேதமடைவதால் வரும் காலங்களில் நீண்ட நாட்களுக்கு அதனை பயன்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும்
-
அதிபர் டிரம்பிடம் நோபல் பரிசை கொடுத்துவிட்டேன்; வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ அறிவிப்பு
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது