ந.வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா

திருப்புத்துார்: ந.வைரவன்பட்டியில் சுற்றுலாத்துறை மற்றும் கிராமத்தினர் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் பங்கேற்றனர்.

கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இஸ்ரேல்,லண்டன்,பெல்ஜியம்,பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினர்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.விருந்தினர்களை கிராமத்தார்கள் வரவேற்றனர். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, வீர விளையாட்டு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தன.

தொடர்ந்து கிராமத்தினருடன் பொங்கல் வைத்து வெளிநாட்டினர் கொண்டாடினர். சுற்றுலா அலுவலர் திருவாசன், பி.டி.ஓ..செழியன், வைரவன்கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க தலைவர் நாகப்பன் , செயலாளர் ஐயப்பன் (எ) சிதம்பரம், கிராமத்தினர் பங்கேற்றனர். தொடர்ந்து வெளிநாட்டினர் ந.வைரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தையும்,பிள்ளையார்பட்டி விண்டேஜ் கார், கேமரா அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

Advertisement