நுாலக கட்டடம் சேதம்

சிங்கம்புணரி: அ.காளாப்பூர் ஊராட்சி கிளை நூலக கட்டடம் 1992ல் கட்டப்பட்டது. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நிலையில் கட்டடம் சிதிலமடைந்துள்ளது.

மழைக்காலத்தில் கூரை ஒழுகுவதால் புத்தகங்கள் மூடையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், வாசிப்பாளர்கள் உள்ளே செல்ல அஞ்சுகின்றனர். இக்கிராம மாணவர்கள் புத்தகங்களை தேடி வெளியூர் நூலகங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே பாழடைந்த நூலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement