சீன வணிகர்களுக்கு புதிய விசா

புதுடில்லி: சீன வணிகர்களுக்கு உதவும் வகையில், 'இபி4' எனப்படும் மின்னணு முதலீட்டு வணிக விசாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக, சீனாவில் உள்ள நம் துாதரகத்தின் இணையதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனாவின் சில குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த வணிகர்கள், இந்தியாவிற்கு செல்வதை எளிமையாக்கும் வகையில், புதிய 'இபி4' எனப்படும் மின்னணு முதலீட்டு வணிக விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விசாவை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக துாதரகம் மற்றும் முகவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

விண்ணப்பித்த நாளில் இருந்து 50 நாட்களுக்குள் விசா வழங்கப்படும்; இந்த விசா வாயிலாக இந்தியாவில் ஆறு மாத காலம் தங்க முடியும்.


இந்த விசா வாயிலாக சீன நாட்டினரை அழைக்க விரும்பும் இந்திய நிறுவனங்கள், https://www.nsws.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், https://indianvisaonline.gov.in என்ற இணையதள பக்கத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, 'இபி4' விசாவை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement