பணி நிரந்தரம் செய்யாமல் அமைச்சர் பேரம் பேசுவதா?

1

பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 5,000 ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்து, 13 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யப் படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 576 ரூபாய் என, 13 ஆண்டுகளில் 7,500 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை அழைத்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பணி நிரந்தரம் வழங்குவதற்கு பதிலாக, 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்தினால், ஆசிரியர்களை கைது செய்கின்றனர். ஆசிரியர்களுக்கு எதிரான அடக்குமுறை, துரோகங்களை தி.மு.க., அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்ற வேண்டும்.

- அன்புமணி

தலைவர், பா.ம.க.,

Advertisement