களைகட்டிய மது விற்பனை: 2 நாட்களில் ரூ.435 கோடி

7

சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற மது பிரியர்கள், நண்பர்களுடன் சேர்ந்து, மது விருந்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, நேற்று மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் மது பிரியர்கள் வழக்கத்தை விட அதிகமாக, பொங்கலுக்கு முந்தைய நாளும், பொங்கலன்றும் மதுபானங்கள் வாங்கினர்.

இதையடுத்து கடந்த, 14ம் தேதி, 184 கோடி ரூபாய், பொங்கலன்று, 251 கோடி ரூபாய் என, இரு தினங்களில் மட்டும், 435 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

பொங்கலன்று சென்னை மண்டலத்தில், 56 கோடி ரூபாய்; திருச்சி, 50 கோடி; மதுரை, 54 கோடி; சேலம், 46 கோடி; கோவை மண்டலத்தில், 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

கடந்த இரு தினங்களில் நடந்த விற்பனையால் மதிப்பு கூட்டு வரி மற்றும் ஆயத்தீர்வை வரி வாயிலாக தமிழக அரசுக்கு, 350 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement