தமிழர் விரோத கூட்டணி: பா.ஜ., விமர்சனம்

சென்னை: 'ஜல்லிக்கட்டை தடை செய்த தமிழர் விரோத தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.

அக்கட்சி அறிக்கை:

மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, காட்டு விலங்குகள் பட்டியலில், வீடுகளில் வளர்க்கப்படும் காளையையும் சேர்த்து அறிவிப்பாணை வெளியிட்டனர். இந்த அறிவிப்பாணை அடிப்படையில், உச்ச நீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்தது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கில், விலங்குகள் பட்டியலில் இருந்த காளையை நீக்கி, மத்திய பா.ஜ., அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த உத்தரவை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு தடை விலகியது. எனவே, ஜல்லிக்கட்டை தடை செய்த தமிழர் விரோத தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement