வங்கதேசத்தில் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை
நமது நிருபர்
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேசத்தில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில், பிரிமியர் லீக் 'டி-20' தொடரின் 19வது சீசன், மார்ச் 26ல் துவங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை, ரூ. 9.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது. தற்போது வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால், முஸ்தபிஜுரை வாங்கிய கோல்கட்டா அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
'பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி முஸ்தபிஜுர் விடுவிக்கப்பட்டார். பிரிமியர் தொடர் வரலாற்றில் முதன் முறையாக, இதுபோன்ற சம்பவம் நடந்தது. வங்கதேச வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டுத்துறைக்கான இடைக்கால ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கடும் கண்டனத்தை பதிவிட்டார்.
தடை
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ''எந்த சூழ்நிலையிலும் வங்கதேசமும், கிரிக்கெட் வீரர்களும் அவமானம் அடைவதை ஏற்க மாட்டோம். அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதைக் காரணம் காட்டி, மார்ச் 26ம் தேதி தொடங்கவிருக்கும் வரவிருக்கும் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
''அடுத்த உத்தரவு வரும் வரை பிரிமியர் லீக் தொடரின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒளிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் முகமது பரோஸ் கான் உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கம்மாய் மேலே கோபம்னா இருந்துட்டு போகட்டுமே யாருக்கு நஷ்டம்
இந்த கேடுகெட்ட காட்டுமிராண்டி கூட்டத்தோடு இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும்
நிறுத்திட்டு போ! யார் வேண்டாம்னு சொன்னா? குளத்தோட கோவிச்சுக்கிட்டு குளிக்காம போனா நஷ்டம் குளத்துக்கு இல்ல! நீ அங்க தினம் ஒருத்தர கொல்லுவே? கோடிக்கணக்குல எங்க காச உனக்கு கொட்டிக் கொடுத்து உன் வீரன நாங்க கோடீஸ்வரனாக்கி கும்மாளம் போட வைக்கணும்?மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது